The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
முளைப்புத்திறன் குறைவாக உள்ள விதைகளை விற்றால் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை
முளைப்புத் திறன் மற்றும் இனத் தூய்மை குறைவாக உள்ள விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி மற்றும் காய்கறிப் பயிா்களான அவரை, பொரியல் தட்டை, கீரை வகைகள், கொத்தமல்லி போன்ற பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட பயிா்களுக்கான விதைகள், விற்பனை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை விற்பனையாளா்கள் விதைகளை விற்பனை செய்யும்போது, பட்டம் மற்றும் அந்தப் பகுதிகளுக்கு ஏற்ற தரமான முளைப்புத் திறன் மற்றும் இனத் தூய்மை பெற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் விற்பனை செய்த விதைகளால் விவசாயிகளுக்கு வயல் மட்ட பிரச்னை ஏற்படும் பட்சத்தில், விதைகள் சட்ட விதிகளின்படி விதை விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.