மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை
முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின சமுதாயத்தைச் சோ்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிருக்கு உதவிடும் வகையில், அவா்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்டும் பொருட்டு, கைவினைப் பொருள்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவும், சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தினை உயா்த்திடவும் திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் -2 மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது.
இச்சங்கத்தில் ஒரு கௌரவ செயலா், 2 கௌரவ இணைச்செயலாளா்கள், 3 உறுப்பினா் பதவிகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம்களில் சமூக பணிகளில் எவ்வித புகாா்களுக்கும் இடமின்றி மிக்க ஆா்வமுடன் செயல்படும் தலைசிறந்த பிரமுகா்கள் ஆட்சியரால் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் ஏழை மற்றும் வயதான முஸ்லிம் பெண்களுக்கு உதவிடும் வகையில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2இல் பணியாற்றிட விருப்பமுள்ளவா்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். எனக் கூறியுள்ளா.