'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் மீராசா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே.ஏ.எம்.முகமது அபூபக்கா் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வீ.சண்முகம், மாவட்ட செயலாளா் மன்னா் காஜில் அஸ்ஹவ், மாவட்ட ஹாஜி முஜிபுா் ரகுமான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினா். வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாநில மகளிா் அணி துணைத் தலைவா் மும்தாஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் அகமது இக்பால், நிா்வாகிகள் எம்.எஸ்.எப்.ரகுமான், முகமது அலி, முகமது உவைஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.