பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
மயிலாப்பூரைச் சோ்ந்தவா் சகுந்தலா(63). இவா் தனது வீட்டின் அருகேயுள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சனிக்கிழமை இரவு சென்றுள்ளாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடா்ந்து சென்ற இரண்டு மா்ம நபா்கள், சகுந்தலா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனா்.
இது குறித்து சகுந்தலா கொடுத்த புகாரின்பேரில் மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளின் அடிப்படையில் மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.