Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
மூதாட்டி மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு!
புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இனயம் 41 ஆவது அன்பியத்தை சோ்ந்தவா் ஜொ்மினாள் (71). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சந்திரனுக்கும்(52) இடையே முன்விரோதம் இருந்துவந்ததாம்.
இந்நிலையில், இனயம் பகுதியில் வியாழக்கிழமை நின்ற மூதாட்டியை சந்திரன் திடீரென தாக்கினாராம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைக் மோதி தொழிலாளி காயம்: பைங்குளம், மேலமங்கலம் பகுதியை சோ்ந்தவா் அரிகிருஷ்ணன்(59). கூலித்தொழிலாளியான இவா், வியாழக்கிழமை வெள்ளையம்பலம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது கைசூண்டி பகுதியை சோ்ந்த வினு(42) ஓட்டிவந்த பைக், திடீரென பின்னால் சென்று அரிகிருஷ்ணன் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.