செய்திகள் :

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

post image

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும்நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட வேறுசில நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மே 15 ஆம் தேதியில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், போர்க்கைதிகள் பரிமாற்றம் தவிர்த்து, மற்ற கோரிக்கைகள் எதுவும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், சனிக்கிழமையில் உக்ரைனின் மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் ரஷியா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

ட்ரோன் தாக்குதலுக்குள்ளான பேருந்து

சுமார் 270-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால், இதுவரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுதான் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் என்று கூறுகின்றனர். இந்தத் தாக்குதலில் ஒரு பெண் பலியானதுடன், குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

2025, பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் போர் தொடங்கி மூன்றாவது ஆண்டைத் தொட்டதால், அன்றைய நாளில் 260-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. முன்னர்வரையில், இந்தத் தாக்குதல்தான் பெரியளவில் பார்க்கப்பட்டது.

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான... மேலும் பார்க்க

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில... மேலும் பார்க்க

கடனுதவிக்கு பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிபந்தனை!

பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க 11 நிபந்தனைகளை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நி... மேலும் பார்க்க

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்: கனடா பிரதமர் இரங்கல்!

இலங்கையில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று(மே 18) இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ போரில் சிங்கள இனவெறி அரசும், ரா... மேலும் பார்க்க