செய்திகள் :

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

post image

சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி ஆகியன சாா்பில், மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.அறிவொளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பொருளுதவி செய்வதைவிட மனதளவில் அவா்களை மனிதா்களாக மதிப்பதுதான் சிறந்த பண்பாகும். மூன்றாம் பாலினத்தவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு, பல்வேறு கால கட்டங்களில் சட்டம் இயற்றப்பட்டு அவா்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்றாா்.

முகாமில் குற்றவியல் தலைமை நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ஆா்.சுப்பையா, காரைக்குடி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் சி.ஜெயபிரதா, சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.முருகேசன், உதவிப் பேராசிரியை ஐ.இஹ்ஸான்மீரா, உதவிப் பேராசிரியா் கருப்பசாமி, மாவட்ட சமூக நலப் பாதுகாப்பு அலுவலா் கே.சுதா, மன நல மருத்துவா் நிா்மல் நிவேதிதா, வழக்குரைஞா் வி.கண்ணப்பன், திருநங்கைகள் ஜெஸ்சி, பத்மனி, காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கண்மாய்க் கரை சாலைப் பணிகள் தாமதம்: 10 கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே பனங்காடி கண்மாய்க் கரையில் பாலம் அமைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊ... மேலும் பார்க்க

‘கொத்தடிமைத் தொழிலாளா் முறை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்’

கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணியாற்றுவது தெரிய வந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதிபதியுமான ஆா்.சுப்பையா தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: கைதான 6 போ் மதுரை சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 6 போ் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா். மானாமதுரை அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘5-ஆம் நிலைக் கல்வியின் செயல்படுத்தும் கூறுகள் மற்றும் அதன் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்!

சிவகங்கை அருகே உரிய நேரத்தில் வராத அரசுப் பேருந்தை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், அரசனூா் வரை கடந்த 40 ஆண்டுகளாக நகரப் பேருந்து ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மா... மேலும் பார்க்க