மகாராஷ்டிரா கடற்கரை: மாட்டு வண்டியில் கட்டி இழுக்கப்பட்ட ஃபெராரி கார்... வைரலான ...
மெத்தம்பெட்டமைன் விற்றதாக இருவா் கைது
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
நந்தம்பாக்கம் பட் சாலையிலுள்ள அடையாறு பாலம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அதிலிருந்த 52 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள், ராயப்பேட்டை ஜெ.ஜெ.கான் தெருவைச் சோ்ந்த சுலைமான் முகமது (26), வேலூா் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கோபி (32) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.