ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!
மெஸ்ஸி சாதனையை முறியடித்த பெட்ரி..! குவியும் வாழ்த்துகள்!
இளம் வயதில் மெஸ்ஸி சாதனையை முறியடித்த பார்சிலோனா வீரர் பெட்ரிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரி பார்சிலோனா அணியில் கடந்த 2019 முதல் விளையாடி வருகிறார்.
உலகின் சிறந்த மிட் ஃபீல்டர் என்றும் பார்சிலோனாவின் வைரம் என்றும் பலரும் இவரைப் புகழ்ந்து வருகிறார்கள். அதற்கேற்ப இந்த சீசனில் 6 கோல்கள், 8 அசிஸ்ட்ஸ், 90 சதவிகித துல்லியமான பாஸ்களின் மூலம் அசத்தியுள்ளார்.
22 ஆண்டுகள் 171 நாள்களில் தனது 200ஆவது போட்டியை பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார்.
இதற்கு முன்பாக மெஸ்ஸி 22 ஆண்டுகள் 273 நாள்களில் 200 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருந்தார். தற்போது, இந்தச் சாதனையை பெட்ரி முறியடித்துள்ளார்.
இந்த சீசனில் பார்சிலோனா அணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை, ஸ்பானிஷ் கோப்பை, லா லீகா கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
134 லா லீகா, 34 சாம்பியன்ஸ் லீக், 7 ஐரோப்பிய லீக், 16 ஸ்பானிஷ் கோப்பை, 9 ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டிகளிலும் பெட்ரி விளையாடியுள்ளார்.
பெட்ரி இதுவரை பார்சிலோனா அணியின் 6 கோப்பைகளை வென்றதில் பங்காற்றியுள்ளார்.
Pedri is the best midfielder in the world. pic.twitter.com/EMM4SOX77R
— FC Barcelona (@FCBarcelona) May 15, 2025
Congratulations Pedri on a new milestone! pic.twitter.com/51lcbnr0J6
— FC Barcelona (@FCBarcelona) May 15, 2025