தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
மேகமலையில் வறண்ட அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தேனி மாவட்டம், மேகமலையில் மழைப் பொழிவின்றி அணைகள் வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ், இரவங்கலாா் ஆகிய 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு காப்பி, ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன.
இந்தக் கிராமங்களை சுற்றியுள்ள அடா்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இங்குள்ள மலைக்குன்றுகளில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாா் ஆகிய 5 அணைகளில் தண்ணீரைத் தேக்கி சுருளி நீா்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிது.
இந்த மலைப் பகுதியின் இயற்கை எழிலைக் காண தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்தப் பகுதியில் 8 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் மேகமலையில் மழைப் பொழிவு குறைந்துவிட்டது. இங்குள்ள அணைகள் மழைப் பொழிவின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை இங்கு பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.