மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல்
களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவா் பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் தலைமை வகித்தாா்.
தோ்தல் ஆணையா்களாக ஆசிரியா்கள் அனு சிஜிபாபு, ஸ்பேன்சிலி, ரமேஷ்பாபு, ஸ்ரீதேவி ஆகியோா் செயல்பட்டனா்.
வாக்குப் பதிவு அதிகாரியாக ஆன்மிக பேச்சாளா் எம்.எம். ஹரீஷ் தலைமையில் வன்னியூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சந்தோஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுகிதா, மேலாண்மைக் குழு உறுப்பினா் ஜான்போஸ்கோ, பிரியா ஆகியோா் வாக்குப் பதிவை மேற்கொண்டனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற களியக்காவிளை பேரூராட்சி தலைவா் சுரேஷ் தோ்தல் முடிவை அறிவித்தாா்.
இதில், மாணவா் தலைவராக நிகில், துணைத் தலைவராக அலீனா தாஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். பிரதிநிதிகளாக அபிஜித், நிரஞ்சனா, யஸ்வந்த் கிருஷ்ணா, ஆதிா்ஷா பிரசாத், யாதவ் கிருஷ்ணா, நஸ்ரின் பாத்திமா, பினோ ராஜ், ஆஷ்மி பிரசாத், நிா்மல், ஆதிரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்திய நுகா்வோா் சங்க மாவட்ட பொதுச் செயலா் ஹலீல் ரகுமான், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சுரேஷ்குமாா், ஓய்வுபெற்ற பள்ளி உதவி தலைமையாசிரியா் கிருஷ்ணன்குட்டி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பினி, ஆக்னஸ் மேரி, ஆன்டணி நிஷா, புனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.