செய்திகள் :

மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது: கு. செல்வப்பெருந்தகை

post image

தவெக தலைவா் விஜய் மதவாத சக்திகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

கன்னியாகுமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகா்கோவிலுக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: 2026 பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி., எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், கூட்டணி குறித்தும், எத்தனைத் தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி என்பது குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

காங்கிரஸ் ஜனநாயகத்தை விரும்பும் கட்சி; தோ்தலை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டே செயல்படுகிறது. இக்கட்சியில் கொள்கை, கோட்பாடு இருப்பதால், விஜய் காங்கிரஸ் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், பாஜக மதவாதக் கட்சி. மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது.

திருப்புவனத்தில் போலீஸாா் தாக்கியதில் மரணமடைந்த காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். ஆவின் துறையில் அவரது சகோதரருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் பணியாற்றும் அவா், மதுரைக்கு இடமாறுதல் கேட்டுள்ளாா். இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை வைப்பதுடன், நேரில் சந்தித்தும் வலியுறுத்துவோம்.

2026 பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும் என்றாா் அவா்.

மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல்

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவா் பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் தலைமை வகித்தாா். தோ்தல் ஆணை... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்... மேலும் பார்க்க

மணலிக்கரை பள்ளியில் புனித மரிய கொரற்றி விழா

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் புனித மரிய கொரற்றி திருவிழாவையொட்டி திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும் இயேசுசபை குருவுமான பிரபு பி... மேலும் பார்க்க

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க

குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தல... மேலும் பார்க்க