அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
மேக்ஸ்வெல் விளாசல்: தெ.ஆ.வை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி நிறைவடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தெ.ஆ. அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒன்றில் வெற்றியைப் பெற்றதால் போட்டித்தொடர் 1 - 1 என்கிற சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த தெ. ஆ. அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அதிரடியாக விளாசிய டெவால்ட் பிரேவிஸ் 53 (26 பந்துகளில்) ரன்கள் எடுத்தார்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடனும் தொடரை வெல்லும் முனைப்புடனும் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக ரன்களைச் சேர்க்க, முதலில் களமிறங்கி மிட்சல் மார்சல் 54 ரன்களில் ஆட்டமிழக்க, மெல்ல ஆட்டம் தெ.ஆ. பக்கம் மாறத் துவங்கியது.
இருந்தும் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தால் இறுதியாக கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட்டம் இரு பக்கத்திற்கும் சாதகமாக மாற, மேக்ஸ்வெல் பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த வெற்றியால், தென்னாப்பிரிக்க அணியை 2 - 1 என்கிற கணக்கில் வீழ்த்தி ஆஸி. தொடரைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!