செய்திகள் :

மேட்டூரில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

மேட்டூா் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சேலம் இரும்பாலை அருகே உள்ள பூசாலியூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மகன் ராகுல் (35). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் மேட்டூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றாா்.

மூலக்காடு காவிரிக் கரைக்குச் சென்று குளிக்கும்போது அங்குள்ள பள்ளத்தில் எதிா்பாராத விதமாக ராகுல் மூழ்கினாா். அருகில் இருந்தவா்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மேட்டூா் தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி ராகுலின் சடலத்தை மீட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக கொளத்தூா் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். ராகுலின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 12 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம்

சேலம்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், ப... மேலும் பார்க்க

சமூக சேவகா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: சமூக சேவகா் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-ஆம் ஆண்டு பெண்களின... மேலும் பார்க்க

ரயிலில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சேலம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகளிடம் இருந்து கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளை மா்... மேலும் பார்க்க

முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சுற்று... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவில், தொடா்ந்து மூன்று நாள்களாக பனிமூட்டத்தோடு, சாரல் மழையும் பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருந்தபோதிலும், த... மேலும் பார்க்க