சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இருப்பினும் மும்பை சார்பில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அந்த அணியின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்து மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் 14 போட்டிகளில் 640 ரன்களை கடந்துள்ளார்.
இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக 618ஆகவே இருந்தது. அந்த சாதனை சச்சின் கைவசம் இருந்தது.
தற்போது, 15 போட்டிகளில் சச்சின் செய்த சாதனையை 14 போட்டிகளிலேயே சூர்யகுமார் முறியடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி டாப் 2-க்குள் செல்ல முடியாததால் எலிமினேட்டரில் மட்டுமே விளையாட முடியும்.
ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் இந்தத் தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதென அதன் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.