சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா?
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 27) நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் டிம் டேவிட் இல்லை. லியம் லிவிங்ஸ்டன் மற்றும் நுவான் துஷாரா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லக்னௌ அணியின் பிளேயிங் லெவனில் திக்வேஷ் சிங் ரதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றையப் போட்டியில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெறும் பட்சத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.