செஞ்சிலுவை சங்க தோ்தல்: ஜூன் 4, 5 தேதிகளில் வேட்பு மனு தாக்கல்
வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ஆர்சிபி..! ஈ சாலா கம் நம்தே நிஜமாகுமா?
ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் யாருமே செய்யாத சாதனையை ஆர்சிபி நிகழ்த்தியுள்ளது.
2008-ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அணிக்கு 7 போட்டிகள் வெளியேவும் 7 போட்டிகள் சொந்த மண்ணிலும் நடக்கும்.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணியும் 7 வெளியூர் போட்டிகளில் வெல்லாத நிலையில், ஆர்சிபி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 230/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி 7 வெளியூர் போட்டிகளில் வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இந்தமுறை கோப்பை வெல்லும் எல்லாம் சாத்தியங்களும் தென்படுகின்றன.
ஆர்சிபி ரசிகர்கள் வழக்கமாகச் சொல்லும் ‘ஈ சாலா கப் நம்தே’ இந்தமுறை நிஜமாகுமென பலரும் காத்திருக்கிறார்கள்.
விளையாட்டு உலகில் இந்தாண்டு ஹாரி கேன் முதல்முறையாக கோப்பையை வென்றதுபோல விராட் கோலியும் ஐபிஎல் கோப்பையை ஏந்துவாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
UNBEATEN AWAY! ❤️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 27, 2025
First IPL team to sweep the road clean. pic.twitter.com/87bewooCek