சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடை..! ஆர்சிபி ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடையை ஆர்சிபி வீரர்கள் அணிவார்கள் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அணி ஒருமுறைக்கூட கோப்பை வெல்லவில்லை. இருப்பினும் அதன் ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவளிப்பதையும் நேசத்தை பொழிவதையும் நிறுத்தியதில்லை என்பது கவனிக்கதக்கதாக இருக்கிறது.
இன்றிரவு (மே.27) ஆர்சிபி அணி லக்னௌவை எதிர்கொள்கிறது. இதில் ஆர்சிபி வென்றால் டாப் 2வில் முன்னேறலாம். அதனால், குவாலிஃபையர் 1-இல் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்நிலையில், ஆர்சிபி அணி ரசிகர்களிடம் கையெழுத்துப் பெற்று அதனை தங்களது அணி வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறியுள்ளது.
இதை அணிந்து இந்தப் போட்டியில் விளையாடுவார்களா அல்லது பிளே-ஆஃப்ஸில் விளையாடுவார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. அல்லது இது விளம்பர யுக்தியாக என்பதும் போட்டி தொடங்கிய பின்னர்தான் தெரியவரும்.
எப்படி இருந்தாலும் ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த இந்த ஜெர்சிக்களை (சீருடைகளை) அணியின் வீரர்கள் அணிந்து பயிற்சிசெய்தாலுமே பெருமைப்படக் கூடியதென ஆர்சிபி ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.
இதனை விடியோவாக வெளியிட்டு, 12த் மேன் ஆர்மி (அணியின் 12ஆவது வீரர்) என தனது ரசிகர்களை ஆர்சிபி நிர்வாகம் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளது.
❤️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 27, 2025
RCB and Jio Star gave fans a once-in-a-lifetime chance to have their autographs featured on our player jerseys, and over a 100,000 of you showed up for it!
Our stars are proud to wear your names, carrying your love and passion with… pic.twitter.com/FD3KuisEq5