செய்திகள் :

'மாணவர்களாக மட்டும் இருங்கள்; மீறினால்...' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அரசு கட்டளை!

post image

நாளுக்கு நாள் வெளிநாட்டு மாணவர்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் காட்டும் அதிரடிகள் அதிகரித்து கொண்டே போகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், "அமெரிக்க அரசிற்கு எதிராகவும், அதன் கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தும் வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது தங்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள்" என்று கூறியது அமெரிக்க அரசு.

அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் உள்ளிட்ட அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்ததால், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் அரசு நிதி நிறுத்தப்பட்டது. இனி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேரும் அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்
ஹார்வார்டு பல்கலைக்கழகம்

இந்த ஆண்டோடு படிப்பு முடிபவர்களைத் தவிர, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள வேறு கல்வி நிறுவனங்களில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்...

"கல்வி நிறுவனங்களிடம் முன்னரே தெரிவிக்காமல், படிப்பைப் பாதியில் நிறுத்துவது, வகுப்புகளுக்கு செல்லாமல் இருப்பது, பாடப்பிரிவில் இருந்து மாறுவது என இனி இருக்கக்கூடாது. மீறினால், அவர்களுக்கான மாணவர் விசா ரத்து செய்யப்படும்.

எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்கா விசாவைப் பெறுவதற்கான தகுதியை இழப்பார்கள். அதனால், விசாவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள் மற்றும் மாணவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்னைகளிலும் ஈடுபடாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

இது இந்திய மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லை. அமெரிக்காவில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.

"உதயநிதிக்கு ED என்றால் 2011 சட்டமன்றத் தேர்தலிலிருந்தே பயம்" - நயினார் நாகேந்திரன் தாக்கு

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிகிறோம். அதில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாத... மேலும் பார்க்க

கீழடி: `அமர்நாத் அறிக்கை வெளியாவது சிலருக்கு பிடிக்கவில்லை; காரணம்..!’ - பாலகிருஷ்ணன் IAS

கீழடி தொடர்பாக ஆய்வு செய்த ASI ( Archeological Survay of India) ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன், அதனை இந்திய தொல்லியல் துறைக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வு அறிக்கையில் சில மாற்றங்கள் செய... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - சிந்து நதி ஒப்பந்தம்: "நம் நாடு எப்படி அழிக்கப்பட்டது தெரியுமா?" - மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது..."நான் இன்றைய தலைமுறையினரிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு நமது நாடு எப்ப... மேலும் பார்க்க

Pakistan: "தோட்டாவிற்குத் தோட்டா எனப் பதில் அளிக்க வேண்டுமா?" - பாகிஸ்தானிடம் மோடி கேள்வி

பிரதமர் மோடி குஜராத்திற்குச் சென்றிருக்கிறார். பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முதலாகத் தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றிருக்கின்றார்.அங்கே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, "ஆபரேஷன் ... மேலும் பார்க்க

இல.கணேசனின் 80 வது பிறந்தநாள் விழா; தன் மனைவியுடன் கலந்துகொண்ட விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்

சென்னையில் நடைபெற்ற நாகலாந்து மாநில ஆளுநர் மேதகு திரு இல.கணேசன் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழாவில் விஐடி துணைத்தலைவர் டாக்டர் திரு ஜி.வி.செல்வம் அவர்கள் தன் மனைவி திருமதி அனுஷா செல்வம் அவர்களுடன் கல... மேலும் பார்க்க

வியாசர்பாடி சம்பவம்: `இது மக்களாட்சி அல்ல, திமிர் பிடித்த பாசிச ஆட்சி' - ஸ்டாலினை சாடிய விஜய்

தவெக தலைவர் விஜய் சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று( மே 26) ஏற்பட்ட தீவிபத்து குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "... மேலும் பார்க்க