செய்திகள் :

பாகிஸ்தான் - சிந்து நதி ஒப்பந்தம்: "நம் நாடு எப்படி அழிக்கப்பட்டது தெரியுமா?" - மோடி குற்றச்சாட்டு

post image

பிரதமர் மோடி தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது...

"நான் இன்றைய தலைமுறையினரிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு நமது நாடு எப்படி அழிக்கப்பட்டது என்று தெரியுமா? 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நீங்கள் பார்த்தால், அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்.

ஜம்மு & காஷ்மீரில் இருக்கும் மற்ற ஆறுகளில் அணை கட்டினால் சுத்தமாக இருக்காது என்று அப்போதே முடிவு செய்யப்பட்டது.

அங்கே தூர்வாருதலும் நடக்காது. இந்த அணையின் கீழ் இருக்கும் சுத்தம் செய்ய வேண்டிய கதவுகள், திறக்கப்பட மாட்டாது என்று அப்போதே கூறப்பட்டது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம்

அதே மாதிரி, 60 ஆண்டுகளுக்கு, அந்தக் கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால், 100 சதவிகித கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கங்கள் தனது சக்தியை இழந்தன. இப்போது அது 2 - 3 சதவிகிதம்தான் உள்ளது.

என்னுடைய சக மக்களுக்குத் தண்ணீருக்கான உரிமை இல்லையா? நான் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட வில்லை. இப்போது சில அணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

அங்கே இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவே பாகிஸ்தானைப் பயம் கொள்ள வைக்கிறது" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

"நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்" என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு... மேலும் பார்க்க

Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK| Imperfect Show 28.5.2025

* ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு!* திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி!* மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு* மாந... மேலும் பார்க்க

TVK : 'உதயநிதி ஒரு சோட்டா பச்சா; திமுக ஒரு ஸ்டிக்கர் அரசு' - தவெக கொ.ப.செ ராஜ் மோகன்

'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக சார்பில் அக்கட்... மேலும் பார்க்க

’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள ந... மேலும் பார்க்க

ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்

வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ர... மேலும் பார்க்க

மொழி விவகாரம்: "தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது; மொழியில் சர்ச்சைகள் வேண்டாம்" - அன்புமணி

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது தற்போது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது.இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராம... மேலும் பார்க்க