ஒட்டன்சத்திரத்தில் புதிய கட்டடப் பணிகள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு
ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்
வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட ஆர்எஸ்எஸ், பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "ED-க்கு பயப்பட மாட்டேன் என்று துணை முதல்வர் உதயநிதி சொல்கிறார். பிறகு ஏன் அவருடைய நண்பர்களை லண்டனுக்கு சென்று ஒடி ஒழிய வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு ED ரெய்டு எங்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது, அந்தக் கூட்டணியில் இருந்தார்கள். மேலே ED ரெய்டு நடக்கும்போது கீழே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போது சின்ன வயது. அதனால்தான் ED மீது இப்போது வரை பயம், இல்லையென்றால் உதயநிதி தன் நண்பர்களை கூடவே கூட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே? ED பயம் இல்லை என்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்?
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு ழுக்க முழுக்க ஆன்மிக மாநாடு. ஏற்கெனவே இந்து அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு இதுபோன்ற மாநாடு நடத்திருக்கிறார். இது பெதுமக்களுக்கு பயனுள்ள பக்தி மாநாடாக அமையும்.
அண்ணாமலை வேல்யாத்திரை நடத்தினார். என்னுடைய யாத்திரை சட்டமன்றத்தை நோக்கித்தான் இருக்கும். சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை அழைத்துச் செல்வதுதான் என்னுடைய யாத்திரை.
முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு எந்த அடிப்படையில் எதற்காக போனார் என்றும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேசியது பற்றி ஊடகங்கள் அவரிடம் கேட்டால் ED ரெய்டுக்காகத்தான் போனாரா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்." என்றார்.