காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்
சிங்கப் பெண்ணே தொடரில் இணையும் பூஜிதா!
தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் சிங்கப் பெண்ணே தொடரில் சின்ன திரை நடிகை பூஜிதா இணையவுள்ளார்.
இத்தொடரில் புதிய பாத்திரத்தை அறிமுகம் செய்து, அதன் மூலம் தொடரின் சுவாரசியத்தைக் கூட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் சின்ன திரைகளில் அதிக டிஆர்பி பெற்று முதன்மைத் தொடர்களின் பட்டியலில் உள்ள சிங்கப் பெண்ணே தொடரில், பூஜிதாவின் வருகை மேலும் ரசிகர்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித் நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் நடிகை தர்ஷக் கெளடா நடித்து வருகிறார்.
இவர்களுடன் விஜே பவித்ரா, ஜீவிதா, யோகலட்சுமி, நிவேதா ரவி, இந்துமதி, மணிகண்டன், தீபா நேந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
மிகவும் வலிமையான பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, பெண்கள் மேம்பாடு குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தரக் குடும்பத்து இளம்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை பிரதிபலிப்பதால், சிங்கப் பெண்ணே தொடர் நிலையான ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளது.
இதனிடையே பூஜிதாவின் வருகை ஆழமான பாத்திரத்தைக் கொண்டிருக்கும் என்றும், இதனால் இத்தொடருக்கான பார்வையாளர்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.