`Porn Addicts-ஆ?’ - `தி நியூயார்க் டைம்ஸ்' எதிராக பழங்குடியினர் - என்ன நடந்தது?
பிரேசிலின் அமேசான் பகுதியைச் சேர்ந்தவர்கள் மருபோ பழங்குடியினர். இவர்கள் ஸ்டார்லிங்க் மூலம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இணைய வசதியைப் பெற்றிருக்கின்றனர்.

இணையச் சேவையைப் பெற்ற பிறகு இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறது.
அதாவது “ மருபோ பழங்குடியினர் ஸ்டார்லிங்க் மூலம் இணைய வசதியைப் பெற்ற ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இளைஞர்கள் தொலைபேசிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள், வன்முறை வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள், சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
மோசடிகள், தவறான தகவல்களைப் பார்க்கிறார்கள் மற்றும் சிறார்கள் ஆபாச வீடியோக்களை அதிக அளவுப் பார்க்கிறார்கள்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது.
இதன் பிறகு ‘எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைப்பு ஒரு தொலைதூர பழங்குடியினரை ஆபாசத்திற்கு அடிமையாக்குகிறது’ என்ற தலைப்பில் செய்திகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

இது, அந்தப் பழங்குடிச் சமூகத்தினரைக் கவலையடையச் செய்திருக்கிறது. பழங்குடியினரின் இளைஞர்களைக் கேலி செய்வதாகவும், தங்களின் கலாசார மரபுகளைத் தவறாக சித்தரிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
இதனையடுத்து, இந்தச் செய்திகள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ’தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் மீது மருபோ பழங்குடியினர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். மேலும் அவர்கள், 180 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 1,500 கோடி) இழப்பீடு கோரி இருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs