கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
France: மனைவியால் தாக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்? - வியட்நாமில் நடந்தது என்ன?
ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோனும் விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. ஃபிரான்ஸ் ஜனாதிபதியும், அவரின் மனைவியும் வியாட்னாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வியாட்னாமின் தலைநகர் ஹனோயில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதற்குப் பிறகு, அவர்கள் இறங்குவதற்காக கதவு திறக்கப்பட்டது.
Viral video shows France’s First Lady grabbing Emmanuel Macron’s face as he exits the presidential plane in Hanoi, Vietnam.
— NDTV WORLD (@NDTVWORLD) May 26, 2025
Read more: https://t.co/YlW1UZS4eh#EmmanuelMacron#Viralpic.twitter.com/cnwnRgFF7I
அப்போது பிரிஜிட் மக்ரோன் இம்மானுவேல் மக்ரோனின் முகத்தில் கைவைத்து அவரை தள்ளிவிடுவது போன்ற சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்தவ வீடியோவை பகிர்ந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, அந்த வீடியோவை பகிர்ந்து, ``இம்மானுவேல் மக்ரோனுக்கு சரியானதுதான் கிடைத்திருக்கிறது. அந்த சம்பவம் எப்படி நடந்தது. செல்லமாக கன்னத்தில் தட்டுவதற்கு முயன்று தவறுதலாக வேகமாக அடித்துவிட்டாரா?
அல்லது உண்மையிலேயே கணவரை டிஸ்ஸு பேப்பர் போல பயன்படுத்துகிறாரா? அல்லது காலரை சரி செய்ய முயலும்போது கன்னத்தில் கைபட்டுவிட்டதா?" எனக் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக விளக்கமளித்த இம்மானுவேல் மக்ரோன், ``எனக்கு என் மனைவிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் எப்போதும்போல இயல்பாக இருக்கிறோம். நகைச்சுவையாக பேசிக்கொள்கிறோம். அந்த வீடியோ தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.