ANI: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் யூடியூபர்களுக்கும் என்னப் பிரச்சனை? - YouTube என்ன சொல்கிறது?
இன்றைய சூழலில் YouTube என்றால் குழந்தைகூட பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், அதற்கான கன்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சிலர் தாங்களாகவே வீடியோவை உருவாக்கிப் பதிவிடுகின்றனர். சிலர் பல சேனல்களிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்து அதை வெட்டி, ஒட்டி புதிய வீடியோப் போல பதிவிடுகின்றனர். அப்படி ஒரு சேனலின் தயாரிப்பு வேறு ஒருவரால் பயன்படுத்தப்படுகிறது என்றால், copyright கொடுக்கலாம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் ஆசிய நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) நிறுவனம் பல்வேறு யூடியூபர்களுக்கு copyright Claim கொடுத்திருக்கிறது.
ANI செய்தி நிறுவனம் தரப்பில்...
``இந்தியாவின் முக்கிய செய்தி நிறுவனமான ANI வீடியோ தளத்தில் எங்களுக்குச் சொந்தமான செய்தி கிளிப்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரபல YouTube படைப்பாளர்கள் கூட நிறுவனத்தின் அங்கீகாரமின்றி கிளிப்களைப் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்துவது YouTube பதிப்புரிமைக் கொள்கைகளை மீறுவதற்கு வழிவகுக்கிறது" என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
YouTube படைப்பாளர்களின் தரப்பில்...
மோஹக் மங்கல் போன்ற YouTube படைப்பாளர்கள், ''ANI-ன் செயல்களை "பணம் பறித்தல்" - "பிளாக்மெயில்" செய்வது போல இருக்கிறது. எந்த வீடியோவாக இருந்தாலும் 10 வினாடிகள் வரையிலான வீடியோ கிளிப்களைப் பயன்படுத்துவற்கு YouTube நிறுவனம் அனுமதி அளிக்கிறது. இது நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் கீழ் வரும். இது எப்படி பதிப்புரிமை மீறலாகும்... செய்தி நிறுவனம் strikes ரத்து செய்யவும், YouTube சேனல் உரிமம் வழங்கவும் ரூ45 - ரூ50 லட்சம் வரை கேட்கிறார்கள்" என்றார்.

மற்றொரு யூடியூபர், ரூ15 - ரூ18 லட்சம் கேட்கிறார்கள். இல்லயென்றால் சேனல் இல்லாமல் ஆக்கப்படலாம் என்கின்றனர். பல படைப்பாளிகள் ANI இலிருந்து இதேபோன்ற எதிர்ப்புகளை பெற்றதாக கூறப்படுகிரது.
YouTube என்ன சொல்கிறது?
பதிப்புரிமைதாரர் தங்கள் பதிப்புரிமையை மீறும் பதிவுகளை அடையாளம் காண YouTube அனுமதிக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் சேனல்களுக்கு எதிர்ப்புகளை வழங்கலாம். பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் சில பயன்பாடுகள் நியாயமான பயன்பாட்டின் கீழ் வருகின்றன என்பதை YouTube ஒப்புக்கொள்கிறது.
அதாவது விமர்சனம், வர்ணனை, செய்தி அறிக்கை, கல்வி போன்ற நோக்கங்களுக்காக அந்த வீடியோவை பயன்படுத்த அனுமதிக்கிறது.
ஒரு சேனல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மூன்று copyright Claim பெற்றால், YouTube சேனலின் அதன் அனைத்து வீடியோக்களையும் நீக்கலாம். ஒரு படைப்பாளர் strikes பெற்றால் அதை எதிர்த்து சவால் செய்ய முடியும் என்றாலும், இது ஒரு நீண்ட, சட்ட சிக்கல் இருக்கும் செயல்முறையாகும்.