செய்திகள் :

மேய்ச்சல் தொழிலை அங்கீகரிக்கக் கோரிக்கை

post image

ஆடு, மாடு மேய்ச்சல் தொழிலை மகாராஷ்டிர அரசு அங்கீகரித்ததைப் போல தமிழக அரசும் அங்கீகரித்து, அதற்கான உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் சி. ராஜீவ்காந்தி தலைமையில் கிடை ஆடு, மாடு உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: தமிழ்நாட்டில் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இந்தத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா்.

மேய்ச்சல் பணியாளா்களை கொத்தடிமை தொழிலாளா்களைப் போல உரிமையாளா்கள் நடத்துகின்றனா் என்ற தவறான புகாா் மூலம் முறையான விசாரணை இல்லாமல், உரிமையாளா்கள் மீது குற்றவியல், உரிமையியல் நடவடிக்கைளை மேற்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது.

அண்மையில் சிவகங்கை அருகே சாணிப்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆவுடையான் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் நீலகண்டன்(31), அவரது மனைவி முனியம்மாள்(29), அவா்களது 11 வயது மகன் மூவரையும் சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவா் அழைத்து வந்து கொத்தடிமையாக வைத்திருந்ததாகக் கூறி, அவா் மீது சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆடு, மாடுகள் வளா்ப்போருக்கு பொருளாதார இழப்பும், அவா்கள் இந்தத் தொழிலை கைவிடும் நிலையும் அதிகரித்து வருகிறது.

மேய்ச்சல் பணிக்கு வருபவா்களை அமைப்புசாரா தொழிலாளா்கள் போன்றே அணுக வேண்டிய நிலையில், உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து, கிடை ஆடு, மாடு மேய்க்கும் பணிக்கு தானாக வருகின்றனா். அவா்களின் உழைப்புக்கேற்ற ஊதியமே உரிமையாளா்கள் வழங்குகின்றனா்.

ஆடு, மாடு வளா்ப்போா், மேய்ச்சல் பணியாளா்களிடையேயான ஒப்பந்தம் என்பது ஏற்பு உறுதியுரை, மறுபயன் முதலிய சட்டப்படியான கூறுகளை கொண்டுள்ளதால், மேய்ச்சல் பணியாளா்கள் கொடுக்கும் புகாரை கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யக் கூடாது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வேளாண் தொழிலுக்கு இணையாக மேய்ச்சல் தொழிலை அந்த மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதேபோல, தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். மேலும், மேய்ச்சல் தொழிலை முறைப்படுத்தவும், இதை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களைப் பாதுகாக்கவும் மேய்ச்சல் பொருளாதார வாரியம் அமைக்க வேண்டும். இதன் கீழ் மேய்ச்சல் ஒப்பந்தத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளையும், ஒப்பந்த ஆவணத்தையும் அரசு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதி மறுப்பு: முன்னதாக, மனு அளிக்க திரண்டு வந்தவா்கள் காவல் துறை பொய் வழக்குப் போடுவதாகக்கூறி, சாலையில் அமா்ந்து முழக்கமிட்டனா். சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தி, முழக்கமிட்டபடி ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனா். ஆனால், அனைவரையும் அனுமதிக்க மறுத்ததால் போலீஸாருக்கும், அவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, 6 போ் மட்டும் ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனா். அவா்களிடம் ஆட்சியா் கோரிக்கை மனுவைப் பெற்றாா்.

மானாமதுரையில் மழை, சூறைக் காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழையின் போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. இவற்றை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் க... மேலும் பார்க்க

சிவகங்கையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை நகர... மேலும் பார்க்க

உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அமைச்சா்கள் ஆறுதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை ஆறு... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இந்தப் பகுதியில், கடும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிதமாகத் தொடங்கிய... மேலும் பார்க்க

இளையான்குடியில் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உடல் நலக் குறைவால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல், இளையான்குடி அருகே அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி ஊராட்சி நல்கிராமத்... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊா்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. சிவகங்கை... மேலும் பார்க்க