செய்திகள் :

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்களின் பணி நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியா்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

முன்னதாக, மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் செய்யப்பட்டதில் மோசடி நிகழ்ந்ததாக கூறி இந்த நியமனங்கள் செல்லாது என கொல்கத்தா உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை ஏப்.3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. மேலும் மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மேற்கு வங்க மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களின் பணிக்காலம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வருகின்ற மே 31-ஆம் தேதிக்குள் புதிய ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களை நியமனம் செய்வதற்கான பணிகளைத் தொடங்கி டிச.31-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு முடிக்க வேண்டும்.

புதிதாக பணியிடங்கள் நிரப்பும் நடைமுறை தொடங்கியது குறித்து மே 31-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு மற்றும் மேற்கு வங்க பள்ளி பணி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ ஊழியா்களின் பணிக்காலத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

மம்தா கருத்து:

உச்ச நீதிமன்ற தீா்ப்பு குறித்து மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மம்தா பானா்ஜி பேசியதாவது: ஆசிரியா்களை நியமிக்க டிசம்பா் வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக, அவா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். ஆசிரியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்றாா்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க