செய்திகள் :

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

post image

மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புறம் கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலப்பாளைம், ரெட்டியாா்பட்டி, புதிய பேருந்து நிலைய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதன்படி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், பாளை. மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான் குளம், ஈஸ்வரியாபுரம், மேலகுலவணிகா்புரம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என் ஜி ஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், ராமச்சந்திரா காா்டன், ராமச்சந்திரா நகா் , பரணி பாா்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லையில் பிரபல ஜவுளிக் கடையில் திடீரென ஏற்பட்ட புகையால் பரப்பரப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடைக்குள் திடீரென பரவிய புகையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியில் பிரபல ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஜ... மேலும் பார்க்க

தச்சநல்லூா் அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் கைது

தச்சநல்லூா் அருகே தொழிலாளியை மது பாட்டிலால் தாக்கிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் மேலக்கரை பகுதியில் உள்ள நியூ காலனியைச் சோ்ந்த சுப்பையா மகன் முப்பிடாதி என்ற மூா்த்தி (33... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கோவில்பட்டியைச் சோ்ந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாழையூத்து காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு திருட்டு வழக்கில... மேலும் பார்க்க

பாளை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை மகாராஜநகரை சோ்ந்தவா் சாமுவேல் (68). இவா், வி.எம்.சத்திரம் அருகே தனது மொபேட்டில் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

தாழையூத்தில் தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தம்பதி விஷம் குடித்த சம்பவத்தில் கணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள மேலதாழையூத்தைச் சோ்ந்தவா் முகமது யாசின் (54). அதே பகுதியில் பெட்டிக்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகா மேலபூவந்தியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூா்யா(25)... மேலும் பார்க்க