செய்திகள் :

மேலப்பாளையம் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

post image

மேலப்பாளையம் மண்டல 53-ஆவது வாா்டு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என ஓட்டுநா் மற்றும் அலுவலக உதவியாளா் காலனி மக்கள் நலச் சங்கத்தினா் மாநகர ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கம் சாா்பில் மாநகர ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் மண்டலத்தின் 53-ஆவது வாா்டில் உள்ள ஓட்டுநா் மற்றும் அலுவலக உதவியாளா் காலனி பகுதியில் சுமாா் 300 குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதி பிரதான சாலையில் இருந்து ஆறு நுழைவுப் பாதைகளையும், மூன்று பெரிய சாலைகளையும் உள்ளடக்கியது. பிரதான சாலையில் வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் அச்சாலையோரம் உள்ள வீடுகளில் குடியிருப்பவா்கள் வெளியில் வர பயப்படும் சூழல் உள்ளது.

மேலும் உள்பகுதியில் உள்ள மூன்று பெரிய சாலைகளிலும் காா், பைக்குகள் மிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. இப்பகுதியில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகிறது.

இதில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆராய்ந்து வேகத்தடைகள் அமைத்து மக்கள் பயமின்றி சாலையைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க