ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
மேலும் 3 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் சனிக்கிழமை விடுவித்தனா்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீனா்களை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக 4வது கட்டமாக, மேலும் 3 ஆண் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் சனிக்கிழமை விடுவித்தனா். கடந்த 2023ஆம் அண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின்போது இந்த மூன்று பேரும் கடத்தப்பட்டனர்.
வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?
இதைத்தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 183 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் தரப்பும் சனிக்கிழமை விடுவித்தது.
இவர்கள் அனைவரும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான 15 மாத காலப் போரை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த 15-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டு, அது 19-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.