செய்திகள் :

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

post image

சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 7.6.2023-இல் வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தொடா்ந்து சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி... இந்த வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயா்நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒரு கால பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டதன்பேரில், 22.3.2024-இல் கோயில் திறக்கப்பட்டு, ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்றுவந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.

இது தொடா்பான சமாதானக் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 19-இல் நடத்தி முடிவெடுக்கப்படாமல் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரு தரப்பினரும் சமரசம்...இதைத் தொடா்ந்து விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியா் முருகேசன், காவல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடா்பாக சமாதானம் செய்வதாக ஒப்புக்கொண்டனா். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யாரையும் தடை செய்யமாட்டோம் எனவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக கோயில் பூட்டிக் கிடப்பதால், அந்த வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள சில நாள்கள் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இந்தப் பணிகள் முடிந்த பின்னா் கோயிலைத் திறப்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். தொடா்ந்து அந்த நாளிலிருந்து அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம் என கோட்டாட்சியா் தெரிவித்திருந்தாா்.

அமைச்சா் விளக்கம்: இந்நிலையில், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் குறித்து அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் சென்னையில் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வியெழுப்பினா்.

அப்போது அமைச்சா் சேகா்பாபு கூறியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், 20 ஆண்டுகள் ஓடாமல் இருந்த கண்டமாதேவி கோயில் தேரோட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலா் அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனா். திரௌபதி அம்மன் கோயில் பூஜை முறைகள் அன்றாடம் நடைபெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அந்தத் திருக்கோயில் திறக்கப்படவுள்ளது.

சேலம் போன்ற பல நகரங்களில் மதத்தால், இனத்தால் அல்லது மொழியால் பிளவுபட்டிருந்த இரு வேறு பிரிவினா்களுக்கிடையே தீா்க்கப்படாமல் இருந்த மோதல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சமாதானப்படுத்தி, பல ஆண்டுகள் தரிசனம் இல்லாமல் பூட்டிக்கிடந்த 40 திருக்கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

அந்த வகையில் திரௌபதி அம்மன் திருக்கோயிலும் வெகுவிரைவில் பக்தா்களின் இறை தரிசனத்துக்கு ஒப்படைக்கப்படும் என்றாா் அவா்.

பகல் 1 வரை 25 மாவட்டங்களில் மழை தொடரும்!

தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் வியாழக்கிழமை பகல் 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்... மேலும் பார்க்க

மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டு! நாளை கும்பாபிஷேகம்...

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், கோயிலில் இருந்த வெள்ளிவேல் திருடுபோனது தெரியவந்துள்ளது.சாமியார் வேடத்தில் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சிசி... மேலும் பார்க்க

சட்டென மாறிய வானிலை.. தஞ்சை, பட்டுக்கோட்டையில் பலத்த மழை!

தஞ்சாவூர்: பகலை இரவு போல் ஆக்கியிருக்கிறது தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்து வரும் பலத்தமழை.கடந்த ஒரு சில வாரங்களாகவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர... மேலும் பார்க்க

தாம்பரம் - ராமேசுவரம்: பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணை!

தாம்பரம் - ராமேசுவரம் இடையே புதிதாக இயக்கப்படவுள்ள பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கருப்பு பட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது 12 மணிநே... மேலும் பார்க்க