செய்திகள் :

மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் பலி!

post image

வேலூர்: ராணிப்பேட்டை அருகே மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய கர்நாடக பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

மேலும், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து, 4 பேருந்துகளில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு புதன்கிழமை இரவு ஊர் திரும்பி உள்ளனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செல்லும்போது பக்தர்கள் சென்ற ஒரு பேருந்து, மண் ஏற்றிவந்த லாரியை முந்திச் செல்ல முயற்சித்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த ஈச்சர் வேன் மீது பக்தர்கள் பேருந்து நேருக்குநேர் மோதியுள்ளது.

மண் லாரியும் பேருந்தின் பின்பக்கம் மோதியதால், சாலையோர பள்ளத்தில் 3 வாகனங்களும் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேனில் வந்த ஓட்டுநர் மஞ்சுநாதன் (30), கிலினர் சங்கரா(32), கிருஷ்ணப்பா (65), சோம சேகர் (30) ஆகிய 4 சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தனர்

மேலும் பேருந்தில் பயணித்த பெண்கள் உள்பட 35-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த கோர விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றம்

துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிகளைத் திரும்பப் பெறக் கோரும் தீா்மானம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முதல்வா் ம... மேலும் பார்க்க

அவையில் இல்லாத ஐஏஏஸ் அதிகாரிகள்: அமைச்சா் துரைமுருகன் கண்டனம்

பேரவை நடவடிக்கையின்போது அவையில் அதிகாரிகள் இல்லாத நிலையில், அவை முன்னவா் துரைமுருகன் கோபத்துடன் கண்டனம் தெரிவித்தாா். சட்டப்பேரவை நிகழ்வுகளின்போது, அரசின் தலைமைச் செயலா் உள்பட உயரதிகாரிகள் அமா்ந்து, ... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிக்கு எதிராக தீா்மானம்: பேரவையில் பாஜக வெளிநடப்பு

துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிக்கு எதிராக பேரவையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து பாஜக வெளிநடப்புச் செய்தது. பல்கலைக்கழக மானியக் குழு வரைவு திருத்த... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு!

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு ஸ்ரீரங்கம் உள்பட பெருமாள் கோயில்களில் இன்று(ஜன. 10) அதிகாலை நடைபெற்றது. ஆழ்வார் பசுரங்கள் பாராயணம் செய்தபடி சொர்க்க வாசல் வழியாக... மேலும் பார்க்க

காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு

வெளிநாட்டு மதுபான நிறுவனத்துக்கு உதவ லஞ்சம் பெற்ாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. பிரி... மேலும் பார்க்க

இரட்டை இலை வழக்கு: தோ்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டது, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க