Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
மேல்மலைக் கிராமச் சாலைகள் சேதம்: பொதுமக்கள் அவதி
கொடைக்கானல் மேல்மலைக் கிராமச் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையான மன்னவனூா் பகுதியிலுள்ள சாலை பெருமளவு சேதமடைந்துள்ளது. இதனால், இந்தப் பகுதிகளுக்குச் செல்வோரின் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.
மேல்மலைக் கிராமங்களில் விளையக்கூடிய காய்கறிகளை இந்தச் சாலை வழியாக சந்தைக்கு எடுத்துச் சென்று வந்த நிலையில், தற்போது சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பல்வேறு பிரசனைகளைச் சந்தித்து வருகின்றனா்.
எனவே, கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் உள்ள சாலைகளைச் சீரமைக்க ஊராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.