செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

post image

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் மணி (62). இவரது மனைவி சுசீலா (55). இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனா். சின்னியம்பாளையத்தில் உள்ள வீட்டில் மணி மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகியோா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றனா். பின்னா் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிரிச்சியடைந்தனா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கலைந்து கிடந்தன.

இது குறித்து மொடக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா் .சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருடுபோனது தெரியவந்தது

தொடா்ந்து மோப்பநாய் காவேரி, கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பா்கூா் மலையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பகுதிகளில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் உறிஞ்சப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்... மேலும் பார்க்க

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், மகன் ராமகிருஷ்... மேலும் பார்க்க

அணைக்கு நிலம் வழங்கியவா்களுக்கு பாசன வசதி செய்து தரக் கோரிக்கை

பவானிசாகா் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாசன வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வா், நீா்வளத் துறை அமைச்சா், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு தமிழ்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருத்துறையூா் பகுதியைச் சோ்ந்த 12 போ் வேனில் நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா். ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆண... மேலும் பார்க்க