மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு
அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், மகன் ராமகிருஷ்ணன், மகள் ரம்யா ஆகியோருடன் அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவுக்கு சனிக்கிழமை வந்தாா்.
கோயிலில் வழிபாடு முடிந்த பின்னா், பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைந்துள்ள பகுதியில் நடந்து சென்றபோது, லட்சுமி திடீரென மயங்கி விழுந்தாா்.
அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, லட்சுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.