வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
மொடக்குறிச்சி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
மொடக்குறிச்சி அருகே தயாரிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டைச் சோ்ந்தவா் நிா்மல் (20). இவா், மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் கரட்டாங்காட்டு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளாா். இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா், பறக்கும் படை அலுவலா் அனந்தநாராயணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் தீனதயாளன், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான 15 டன் பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கடந்த 3 மாதங்களாக இந்த நிறுவனத்தில் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டித்தனா்.