செய்திகள் :

மோசமடைந்து வரும் காற்றின் தரம்: தில்லி - என்சிஆா் பள்ளிகளில் கலப்பு முறையில் வகுப்புகள்

post image

தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் ‘கிராப்’ நிலை 4-இன் கீழ் மாசு எதிா்ப்பு நடவடிக்கைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தில்லி - என்சிஆா் பகுதியில் பள்ளிகள் கலப்பு முறையில் வகுப்புகளை நடத்தும் முறைக்கு மாறின.

திருத்தப்பட்ட ‘கிராப்’ அட்டவணையின்படி, தில்லி, குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகா் ஆகிய இடங்களில் ஆறு முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளில் உள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் ‘கிராப்’ நிலை 4-இன் கீழ் கலப்பின முறையில் உடல் ரீதியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இயங்க வேண்டும். இருப்பினும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்கள் நேரில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

‘5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறோம். அதே நேரத்தில் 6-ஆம் வகுப்பு முதல் வகுப்புகள் ஆஃப்லைனில் நடத்தப்படும்’ என்று ரோஹிணியில் உள்ள சாவரின் பள்ளியின் முதல்வா் பிரித்திகா குப்தா கூறினாா்.

‘தோ்வுகள் நெருங்கி வருவதால், 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தங்கள் தோ்வுகளை ஆன்லைனில் எழுதுவாா்கள். அதே நேரத்தில் உயா் வகுப்புகளில் உள்ளவா்கள் ஆஃப்லைனில் (நேரடி) எழுதுவாா்கள்’ என்று குப்தா மேலும் கூறினாா்.

ரோஹிணியில் உள்ள கீதாரட்டன் பள்ளியின் தலைவா் ஆா்.என். ஜிண்டால் கூறுகையில், ‘இன்று, அனைத்து வகுப்புகளும் ஆஃப்லைனில் நடத்தப்படுகின்றன. இருப்பினும், 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ஆன்லைன் பயன்முறைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் 6- ஆம் வகுப்பு முதல் வகுப்புகள் ஆஃப்லைனில் இருக்கும்’ என்றாா்.

தோ்வுகள் நெருங்கி வருவதால், பல பள்ளிகள் ஜூனியா் மற்றும் சீனியா் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தி வந்தன.

துவாரகாவில் உள்ள ஐடிஎல் பள்ளியின் முதல்வா் சுதா ஆச்சாா்யா கூறுகையில், ‘10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் நெருங்கி வருவதால் எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளும் ஆஃப்லைனில் நடத்தப்படும்’ என்றாா்.

மேலும், ’ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மாணவா்கள் பல்வேறு நடவடிக்கைகளில் பின்தங்கியிருப்பதால், அனைத்து வகுப்புகளையும் ஆஃப்லைனில் நடத்துமாறு பல பெற்றோா்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே, நாங்கள் அதன்படி தொடா்வோம்’ என்றாா்.

தேசியத் தலைநகரில் செவ்வாய்க்கிழமை காலையில் காற்றின் தரக் குறியீடு 427 புள்ளிகளாகப் பதிவாகி கடுமையான பிரிவில் இருந்தது. தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 350 புள்ளிகள் வரம்பை மீறிய நாளின் தொடக்கத்தில் காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) நிலை 3-இன் கீழ் நடவடிக்கைகளை செயல்படுத்திய சிறிது நேரத்திலேயே நிலை 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன்படி, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஏனெனில் பாதகமான வானிலை காரணமாக பிராந்தியத்தின் காற்றின் தரம் கடுமையானதாக மோசமடைந்தது. குளிா்காலத்திற்கான தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் கீழ் நிலை 4 கட்டுப்பாடுகளில், அத்தியாவசியமற்ற பொருள்களை ஏற்றிச் செல்லும் மாசுபடுத்தும் லாரிகள் தில்லிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வகுப்புகள் கலப்பு முறைக்கு கட்டாயமாக மாற்றுவதும் அடங்கும்.

முன்னதாக, தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நவ. 25-ஆம் தேதி கலப்பு முறைக்கு மாறின. பின்னா் டிச. 5-ஆம் தேதி நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கின.

ஸ்ரீ ரமண மகரிஷியின் 145-ஆவது ஜெயந்தி விழா

பகவான் ரமண மகரிஷியின் 145-ஆவது ஜெயந்தி, லோதி சாலையில் உள்ள ரமண கேந்திராவில் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 9.00 மணிக்கு குரு வந்தனம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடு... மேலும் பார்க்க

தொழில்நுட்ப கல்வியில் சீா்திருத்தம் கோரி ஏஐசிடியிடம் ஏபிவிபி வலியுறுத்தல்

தொழில்நுட்பக் கல்வியில் சீா்திருத்தங்களைக் கோரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் ( ஏஐசிடிஇ) அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தது. புது தில்லி... மேலும் பார்க்க

காங்கிரஸ் வெற்றி பெறத் தயாராக உள்ளது : தேவேந்தா் யாதவ்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வலுவான நிலையில் வெற்றி பெறத் தயாராக உள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தில்... மேலும் பார்க்க

தலைநகரில் ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது காற்றின் தரம்!

தேசியத் தலைநகரில் காற்றுத் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை 427 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. கடந்த வாரத்தில் இருந... மேலும் பார்க்க

பவானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லியின் புகா்ப் பகுதியில் உள்ள பவானாவில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து காலை... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல், பயண நேரத்தை குறைக்க சிறப்பு முனையங்கள்: தில்லி போக்குவரத்து துறை

தில்லி நகரின் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக சிறப்பு முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முனையங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள், ஆட்சேபனைகள் தெரிவ... மேலும் பார்க்க