சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 4வது காலாண்டு லாபம் சரிவு!
மோடியுடன் பாதுகாப்புத் துறை செயலர் ஆலோசனை!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வரும் நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில், பதிலடி கொடுப்பதற்கான நேரம், இடம் போன்றவற்றை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இதனால், பாகிஸ்தானை எந்த நேரத்திலும் இந்தியா தாக்கும் சூழல் உள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையொட்டிய அரபிக் கடலில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடற்படைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி சனிக்கிழமை விளக்கம் அளித்திருந்தார்.
தொடர்ந்து, விமானப் படைத் தளபதி அமர் பிரதாப் சிங்நேற்று பிரதமரைச் சந்தித்து, முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.