செய்திகள் :

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...'- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

post image

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார்.

சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி, ``பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லும்.

சீனாவில் பிரதமர் மோடி
சீனாவில் பிரதமர் மோடி

2.8 பில்லியன் மக்களின் நலன் இந்தியா-சீனா ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது." என்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``இன்று பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கை சந்தித்ததை பின்வரும் பின்னணியில் மதிப்பிட வேண்டும்.

ஜூன் 2020-ல், கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன ஆக்கிரமிப்பு, நமது துணிச்சலான 20 வீரர்களின் உயிர்களைக் காவு வாங்கியது.

இருப்பினும், சீன ஆக்கிரமிப்பை அடையாளம் காண்பதற்குப் பதிலாக, ஜூன் 19, 2020 அன்று, பிரதமர் மோடி சீனாவுக்கு 'க்ளீன் சிட்' கொடுத்தார்.

லடாக் எல்லையில் சீனாவுடனான நிலையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என ராணுவத் தளபதி கோரியுள்ள நிலையிலும், அதை அடையத் தவறியபோதிலும், மோடி அரசு சீனாவுடன் சமரசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அதன் மூலம் அதன் ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குகிறது. யார்லுங் சாங்போ நதியில் சீனா ஒரு பிரமாண்டமான நீர் மின் திட்டத்தை அறிவித்துள்ளது.

இது நமது வடகிழக்குப் பகுதிகளுக்கு மிகக் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் மோடி அரசு இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

சீனாவிலிருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இறக்குமதிகள் குவிந்து வருவது நமது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) தொடர்ந்து அழித்து வருகிறது.

பிற நாடுகளைப் போலல்லாமல், சீன இறக்குமதியாளர்களுக்கு நாம் பெரும்பாலும் தடையற்ற சுதந்திரம் அளித்துள்ளோம்.

சீன ஆக்கிரமிப்பு, அதன் திமிர்த்தனம், நமது அரசின் பலவீனம் ஆகியவற்றால் 'புதிய இயல்புநிலை' வரையறுக்கப்பட வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எ... மேலும் பார்க்க

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க