செய்திகள் :

`யார்கிட்டயும் ஒரு பைசா கூட வாங்கறதில்லை' - சமூக பணி குறித்து நடிகர் ஶ்ரீ குமார்

post image
ஆதரவு ஏதுமின்றி, சாலையோரங்களில், பேருந்து நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கும் முதியோர், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக அவர்களைக் கண்டறிந்து, மருத்துவ உதவி, தங்குமிடம், உணவு ஆகியவற்றைக் கிடைக்கச் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் நடிகர் ஶ்ரீ.

'வானத்தைப் போல' தொடர் முடிந்த பின் விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கும் இவரின் இந்தப் புதுப் பயணம் குறித்து அவரிடமே கேட்டோம்.

''நம்மால் முடிஞ்ச உதவியை முடிஞ்ச அளவு கொஞ்சம் பேருக்காவது செய்யணும்கிற நினைப்பு எனக்குள்ள ரொம்ப நாளா இருந்தது. எங்கப்பா அந்த மாதிரி தன்னால் முடிஞ்ச உதவிகளை பெருசா வெளியே சொல்லிக்காம செய்வார். 'எம்.ஜி.ஆரைப் பார்த்து எனக்கு இந்தப் பழக்கம் வந்துச்சுன்னு சொல்வார் அவர். அதேபோல என் நட்பு வட்டத்தில் அதாவது, செலிபிரிட்டி இல்லாத நட்பு வட்டத்தில் இருக்கிறவங்கள்ல சிலர் இந்த மாதிரி வெளிய தெரியாம தங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்துகிட்டிருக்காங்க.

ஶ்ரீ குமார் தன் டீமுடன்

'இதுவே நமக்கு லேட்'

தொடர்ந்து அவங்க கிட்ட பேசிட்டு இருந்தப்பதான் 'இதுவே நமக்கு லேட்'னு தோண, இப்ப அஞ்சாரு மாசத்துக்கு முன்னாடி இந்த விஷயத்தை தொடங்கியிருக்கேன்.

தவிர வழக்கமா சர்ச்சுக்குப்  போற பழக்கம்  இருக்கிறவன் நான். ஒவ்வொரு முறை போகிறப்பவும் அங்க காணிக்கையா ஏதாவது போட்டுட்டு வந்தோம்னா, அன்னைக்கு உடம்புக்கு முடியாதவங்க, உதவி தேவைப்படுறவங்கன்னு  யாராச்சும் கண்ணுல தென்படுவாங்க. அப்பெல்லாம் 'நீ என்க்கிட்டத் தர்ற காணிக்கையை இவங்களுக்குக் கொடு'னு ஜீசஸ் சொல்ற மாதிரியே எனக்கு தோணுச்சு.

யார்கிட்டயும் ஒரு பைசா கூட வாங்கறதில்லை

அதனால நான் சொன்ன அந்த நண்பர்களுடன் சேர்ந்தே ஒரு டீமை ரெடி பண்ணி வேலையைத் தொடங்கிட்டோம். வயதான சில பாடட்டிகளுக்குத் தேவையான துணிமணிகளை  வாங்கித் தந்து ஹோம்ல சேர்த்து விட்டிருக்கோம். உடல் நலன்ல பிரச்னை இருந்த சிலருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம்.

இந்த வேலைகளுக்காக நாங்க யார்கிட்டயும் ஒரு பைசா கூட வாங்கறதில்லை. எங்க சம்பாத்தியத்துல இருந்தே கொஞ்சம் காசை ஒதுக்கி பண்றோம். அதேபோல இந்த விஷயத்தை நாலு பேருக்குச் சொல்லி விளம்பரப்படுத்தவும் நான் விரும்பலை. புகழ் கிடைக்கும்னு சிலர் இந்த மாதிரி விஷயங்களை வெளியில சொல்றாங்க. எனக்கு அதுல உடன்பாடில்லை. நான் என் நண்பன் மனோ உள்ளிட்ட சிலரைப்  பார்த்து இதைத் தொடங்கின மாதிரி எங்களுடைய இந்த சர்வீஸைப் பார்த்து இன்னும் நாலு பேர் செய்ய நினைக்கலாம்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இப்பக் கூட இதுபத்திப் பேசறேன்'' என்கிறார்.

*************************

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BB Tamil 8 : `இந்த வீட்டை விட்டு...'- எமோஷனலாக பேசிய முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 104- வது நாளுக்கான ( ஜனவரி 18) புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. இம்முறை விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்... மேலும் பார்க்க

BB Tamil 8 Grand Finale: `வெளியேறும் இருவர்' - நான்காம், ஐந்தாம் இடங்கள் பிடித்தவர்கள் இவர்கள்தான்

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே ஷூட் சென்னை பூந்தமல்லியிலுள்ள பிக்பாஸ் செட்டில் இன்று காலை தொடங்கி தற்போது போய்க் கொண்டிருக்கிறது... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 103: அழறதால சொன்னதெல்லாம் நியாயம்ன்னு ஆகிடாது- கடைசி நேரம்; காத்திருக்கும் ட்விஸ்ட்

இன்னமும் இரண்டே நாட்கள். இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை தெரிந்து விடும். அது யாராக இருந்தாலும் தகுதியான நபரின் கையில் சென்று சேரும் போதுதான் அந்த வெற்றிக்கே ஒரு நியாயம் கிடைக்கிறது. அந்... மேலும் பார்க்க

BB Tamil 8 : இறுதி கட்டத்தில் பிக் பாஸ்... `நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன்’ - நெகிழ்ந்த முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 104- வது நாளுக்கான ( ஜனவரி 18) முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. இம்முறை விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்த... மேலும் பார்க்க

BB Tamil 8 : `ஒரு வாழைப் பழத்துக்கு இவ்வளவு அக்கபோறா!'- பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பரிதாபங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) நான்காவது புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்... மேலும் பார்க்க