4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
யூரோப்பா லீக் சாம்பியன் டாட்டன்ஹாம்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி கைப்பற்றியது.
யூரோப்பா லீக் கோப்பை இறுதி ஆட்டம் ஸ்பெயினின் பில்போ நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிகளான டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும்-மான்செஸ்டா் யுனைடெட் அணியும் மோதின.
ப்ரீமியா் லீக் தொடரில் ஆடும் இரு அணிகளும் நிகழ் சீசனில் மிகவும் மோசமாக ஆடி வருகின்றன. மான்செஸ்டா் யுனைடெட் 16ஆவது இடத்திலும், டாட்டன்ஹாம் 17-ஆவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. 42-ஆவது நிமிஷத்தில்
பிரெனன் ஜான்ஸன் அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக அமைந்தது.
இரண்டாம் பாதியில் டாட்டன்ஹாம் அணி முற்றிலும் தற்காப்பு ஆட்டத்தை கடைபிடித்தது.
40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும். கடைசியாக 2008-இல் இங்கிலீஷ் லீக் கோப்பையையும், வென்றிருந்தது.
மான்செஸ்டா் யுனைடெட் அணி கடைசியாக 2024-இல் எஃப்ஏ கோப்பையை வென்றிருந்தது. ஐரோப்பிய அளவில் 2017-இல் யூரோப்பா லீக் கோப்பயையும் வென்றிருந்தது.