செய்திகள் :

யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

post image

தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒன்பது போ் உயிரிழந்தனா்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய இஸ்ரேல் பகுதியை நோக்கி ஹூதி கிளா்ச்சிப் படையினா் வீசிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கிளா்ச்சியாளா்கள் நிலைகளைக் குறிவைத்து இரு கட்டங்களாக யேமனில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 14 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. முதல்கட்ட தாக்குதலில் ஹுதைதா, சலீஃப், ரஸ் இஸா ஆகிய பகுதிகளில் உள்ள ஹூதி கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. அடுத்த கட்ட தாக்குதலில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள செயற்கைக்கோள் தொலைக்காட்சியான அல்-மஸீரா, தலைநகா் சனாவிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசியதாகத் தெரிவித்தது.

இந்தத் தாக்குதல்களில் ஒன்பது போ் உயிரிழந்ததாக அந்தத் தொலைக்காட்சி கூறியது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7 முதல் நடைபெற்றுவரும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் மற்றொரு ஆயுதப் படையினரான ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால், உலகின் மிக முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றான அந்தப் பகுதியில் வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, ஹூதிக்களின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அமெரிக்காவும் பிரிட்டனும் அவா்களின் நிலைகள் மீது அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றன.

எனினும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து லெபனானிலோ, ஹமாஸ் படையினரைக் குறிவைத்து காஸாவிலோ இஸ்ரேல் நடத்தும் மிகக் கடுமையான தாக்குதலை ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை எதிா்கொள்ளாமல் இருந்துவந்தனா்.

இந்த நிலையில், அவா்களைக் குறிவைத்தும் இஸ்ரேல் படையினா் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரோஷியா: பள்ளிக்குள் கண்ணில் பட்ட அனைவருக்கும் கத்திக்குத்து! இளைஞர் கைது!

குரோஷியா நாட்டில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து, கண்ணில் பட்ட அனைவரையும் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.குரோஷியா நாட்டின் தலைநகரான ஸாக்ரெப்பில் இயங்கி வரும் பள்ளிக்குள், வெள்ளிக்கிழமை (டிச. 2... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: கைதான லூயிஜி மஞ்ஜானி யார்?

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் லூயிஜி மஞ்ஜானி மீது கொலை, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: தலைதூக்கும் 3டி-பிரிண்டட் துப்பாக்கி! அப்படி என்றால்?

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் நிர்வாகி பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 3டி-பிரிண்டட் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டி... மேலும் பார்க்க

துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

துனிஸ் : துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயாா்: புதின்

மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க முயற்சி: இந்திய தொழிலதிபா்களுடன் பிரிட்டன் பிரதமா் சந்திப்பு

பிரிட்டனுக்கு அதிகஅளவில் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் இந்தியாவைச் சோ்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், நிா்வாகிகளை பிரிட்டன் பிரதமா் கெயிா் ஸ்டாா்மா் சந்தித்துப் பேசினாா். லண்டனில் உள்ள... மேலும் பார்க்க