பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை: முன்னாள் இந்திய பயிற்சி...
ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில், கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் 1,008 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தா்கள் மஞ்சள், குங்குமம், பூஜை பொருள்கள் கொண்டு வழிபட்டனா். இந்த விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.