ரம்யா - தொடரும் ஆதிக் ரவிச்சந்திரன் சென்டிமெண்ட்!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் நாயகிகளுக்கு ஒரே பெயரையே வைத்து வருகிறார்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படம் ஏப்.10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் படத்தின் மீதான ஆவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லியில் த்ரிஷா ‘ரம்யா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதை அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இப்படியுமா மட்டம் தட்டுவது?
ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படத்தின் நாயகியான ஆனந்தி, ரம்யா என்கிற கதாபாத்திரத்திலே நடித்திருந்தார். அதேபோல், தன் அடுத்தடுத்த படங்களான அன்பானவன் அசராதவன் அடங்காதவனில் தமன்னாவுக்கு, பஹிராவில் அமைரா தஸ்துருக்கு, மார்க் ஆண்டனியில் ரிது வர்மாவுக்கு ‘ரம்யா’ என்றே பெயர் சூட்டியுள்ளார்.
எதற்காக, ரம்யா என்கிற பெயரையே அனைத்து நாயகிகளுக்கும் வைத்தார் என கேள்விகள் எழுந்துவருகின்றன. ஒருவேளை, ஏதாவது செண்டிமெண்ட்டா இல்லை வேறு காரணமா என ரசிகர்களிடம் இது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன @Adhikravi ப்ரோ #Ramya இந்த பேரு ல என்னமோ இருக்கும் போலயே ❤️❤️❤️#GoodBadUglypic.twitter.com/y9Ij37Rbjg
— தமிழ் செல்வன் (@_Tamilselvan_26) February 22, 2025