சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?
ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி தூத்துக்குடியில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி ஈரோடு புறப்பட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/0yjr7n2e/2025-02-11-at-08.07.2222767bf3.jpg)
விருதுநகர் ரயில் நிலையம் சென்றபோது, இளைஞர் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். அந்த ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிக்கு அருகே வந்து அமர்ந்திருக்கிறார். ரயில் மதுரையை கடந்து கொடைரோடு ரயில் நிலையம் சென்றபோது, அதிகாலை 3.15 மணி அளவில் எல்லோரும் தூக்கத்தில் இருந்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவி சத்தமிட்டவுடன் சக பயணிகள் ரயில் நிலைய அவசரக்கட்டுப்பாட்டு எண் 139-க்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். இதற்கிடையே ரயில் திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றது. அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீஸார், ரயில் பெட்டியில் ஏறி விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்று, பாலியல் தொல்லை கொடுத்த, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை கைது செய்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/ttsvt85a/2025-02-11-at-08.07.238b729110.jpg)
விசாரணையில், கோவையில் கூலி தொழிலாளியாக உள்ள அவர் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து திரும்பியிருக்கிறார். அப்போது மாணவியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அண்மையில் வேலூரில், ரயிலில் கர்ப்பிணி பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில்...இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.