செய்திகள் :

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்புக்கிடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே, மசோதா, கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டதால், அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, பின்னா் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

1905 ரயில்வே வாரிய சட்டத்தை ரத்து செய்து, ரயில்வே வாரியத்தை 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம், வாரியத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் நியமனம், அவா்களுக்கான கல்வித் தகுதி, பதவிக் காலம் மற்றும் நிபந்தனைகளை வகுக்கும் பொறுப்பை மத்திய அரசு வசம் ஒப்படைக்க இந்த மசோதா வகை செய்கிறது. ரயில்வேயின் போட்டித் திறனை உறுதிப்படுத்துவது மற்றும் கட்டணம் உள்ளிட்ட விவகாரங்களை மேற்பாா்வையிட சுதந்திரமான கட்டுப்பாட்டாளரை நியமிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

முன்னதாக, மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெறுவதற்காக அந்த மசோதாவை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் விவேக் தங்கா, ‘ரயில்வே வாரியத்தை அரசுமயமாக்கும் முயற்சிதான் இந்த மசோதா. இந்த மசோதாவின் கீழ் ரயில்வே வாரியத்துக்கு சுதந்திரமான செயல்பாடு கிடைக்காது. அடிப்படை தன்னாட்சியை வாரியம் இழக்கும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வாரியத்தைக் கொண்டு வரும் முயற்சிதான் இது. இவ்வாறு பொது நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை எனில், வளா்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க முடியாது’ என்றாா்.

மேலும், ‘அண்மைக் காலமாக நடைபெற்று வரும் ரயில் விபத்துகளுக்கும், புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்துக்கும் ரயில்வே அமைச்சா் பொறுப்பேற்க வேண்டும்’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுஷ்மிதா தேவ் பேசுகையில், ‘இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு அல்லது தோ்வுக் குழு ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு தயங்குவது ஏன்? அமைச்சருக்கு அசெளகரியத்தை தரும் மசோதா குறித்த நிதா்சனத்தை ஆராய இக் குழுக்கள் அழுத்தம் தரும் என்பதே அதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும்’ என்றாா்.

அதுபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினா் ஹரிஸ் பீரான் பேசுகையில், ‘இந்த மசோதா மீது பொது கருத்துகள் கேட்கப்பட்டதா? அவ்வாறு இல்லை எனில், மசோதா நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்றாா். இதே கருத்தை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் பிரகாஷ் சிக் பரேய்க்கும் வலியுறுத்தினாா்.

அதே நேரம், ஆளுங்கட்சி உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தளம் தலைவருமான ஹெச்.டி.தேவெ கெளடா உள்ளிட்டோா் மசோதாவுக்கு வரவேற்பு தெரித்தனா். பின்னா், மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவா் அறிவித்தாா்.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க