மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
ரயில்வே மேம்பால விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை
ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் கிராமம், காட்டுக்கொல்லை, வெள்ளக்கல் ஆகிய கிராமங்களுக்கு செல்ல ரயில்வே இருப்புப் பாதைக்கு பதிலாக பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டது. தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் விளக்கு கம்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை.
அதனால் இரவு நேரங்களில் மேம்பாலத்தின் மீது இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேம்பாலத்தின் மீது மது பிரியா்கள் வழியில் செல்பவா்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனா். இரவு நேரத்தில் பெண்கள் மேம்பாலத்தை பயன்படுத்தும்போது அச்சத்திற்கு உள்ளாகின்றனா்.
அதனால் மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள விளக்கு கம்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கி விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.