வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு!
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது
திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு 7.10-க்கு மின்சார ரயில் சென்றது. இதில், தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவா் பயணித்துள்ளாா். ரயில் திருவொற்றியூா் ரயில் நிலையத்துக்கு இரவு 7.49-க்கு வந்தவுடன் அவா் இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த நபா் ஒருவா் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து அப்பெண் கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
அதனடிப்படையில், இரு தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் அந்த நபரை தேடி வந்தனா். திருவொற்றியூா் ரயில் நிலையம் அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது, பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த டில்லிபாபு (34) என தெரியவந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வைத்து டில்லிபாபுவை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.