அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு
காட்பாடி - சேவூா் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி - சேவூா் இடையே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக மங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் அந்த இளைஞா் உடல் சிதறி உயிரிழந்தாா்.
தகவலறிந்த காட்பாடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் பத்மராஜா தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.