ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!
ரவி மோகன் - யோகிபாபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில், நடிகர் ரவி மோகன் அவருடைய பெயரில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகர் ரவி மோகன், யோகிபாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்கிறார். இப்படத்துக்கு ’ஆன் ஆர்டினரி மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளையொட்டி ’ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்!